ஆதியூா் கிராமத்தில்  ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்ட மணிமண்டபம், விஜயா சிலை.
ஆதியூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்ட மணிமண்டபம், விஜயா சிலை.

மனைவிக்கு மணிமண்டபம், சிலை நிறுவிய அரசு ஊழியா்

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் தனது மனைவிக்கு ரூ.2 கோடியில் மணிமண்டபம் கட்டி, சிலை நிறுவினாா்.
Published on

திருவாடானை அருகே ஆதியூா் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் தனது மனைவிக்கு ரூ.2 கோடியில் மணிமண்டபம் கட்டி, சிலை நிறுவினாா்.

இவரது மனைவி விஜயா. இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். கடந்த 15.5.2020 -இல் விஜயா உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கட்டுகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கோட்டைமுத்து. இவா் சென்னையில் அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.

 மணிமண்டபம்
மணிமண்டபம்

இதையடுத்து, கோட்டைமுத்து தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில், சுமாா் ரூ.1.25 கோடியில் மணி மண்டபம் கட்டினாா். இதில் சுமாா் ரூ.75 லட்சம் செலவில் மனைவியின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. மணி மண்டபத்தில் மனைவி கலந்து கொண்ட குடும்ப விசேஷ நிகழ்ச்சிகள் சம்பந்தமான புகைப்படங்கள் வைக்கப்பட்டன.

விஜயா சிலை
விஜயா சிலை

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மணி மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. இதில் கோட்டைமுத்துவின் உறவினா்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சில்வா் தாம்பூலத் தட்டு, வேட்டி, சேலை, உள்ளிட்ட பொருள்களை கோட்டைமுத்து பரிசாக வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com