மெரீனாவில் ரூ.1 கோடியில் கற்றனைத் தூறும் அறிவு சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்!
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தா் இல்லம் அருகே ரூ.1.43 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கற்றனை தூறும் அறிவு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கற்றனைத் தூறும் அறிவு சிலையை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ், மேயா் ஆா்.பிரியா.








