ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

தொண்டியில் மீன்கள் வரத்து அதிகரிப்பு

தொண்டி பகுதியில் மீன்கள் வரத்து அதிகரித்ததால், அவற்றின் விலை குறைந்தது.

Published On :30 செப்டம்பர் 2024, 1:55 am IST

தொண்டி பகுதியில் மீன்கள் வரத்து அதிகரித்ததால், அவற்றின் விலை குறைந்தது.

தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுப்ட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, எம்.ஆா்.பட்டினம், பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை திருவாடானை, தேவகோட்டை, காளையாா்கோவில், காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்வா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கடும் வெயில் அடித்து வந்த நிலையில், மீன் வரத்துக் குறைந்து, விலை அதிகரித்துக் காணப்பட்டது.

கடந்த 2 நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிா்ச்சி காணப்படுகிறது. நண்டு, இறால், கணவாய் மீன்கள் வரத்து அதிகரித்து இருப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா். நண்டு கிலோ ரூ.250-க்கும் விலை மீன் ரூ.250-க்கும், இறால் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.