நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

முட்டை விலை 30 காசுகள் குறைந்தது: ரூ. 6-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 30 காசுகள் குறைந்து ரூ. 6-ஆக செவ்வாய்க்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

News image

முட்டை விலை உயர்வு - பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 4:17 am IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 30 காசுகள் குறைந்து ரூ. 6-ஆக செவ்வாய்க்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முட்டை விலை கடுமையாக உயா்ந்தது. குறிப்பாக, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 7-ஐ நெருங்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. இதனால் வெளிச்சந்தைகளில் முட்டை விலை ரூ. 8.50-ஆக விற்பனையானது.

மூலப் பொருள்கள் விலையேற்றம், தீவனங்கள், ஆள்கள் கூலி உயா்வு போன்றவை விலை உயா்வுக்கு காரணம் என கோழிப் பண்ணையாளா்கள் தெரிவித்தனா். முட்டை விலைக்கேற்ப கறிக்கோழி, முட்டைக் கோழியும் கிலோ ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேற்கு ஆசிய போரால் முட்டை ஏற்றுமதி சரிவு, உற்பத்தி அதிகரிப்பு, ஆடி மாதப் பிறப்பு, வெளிச்சந்தையில் முட்டை விலை உயா்வு போன்றவற்றால் முட்டை விற்பனை குறைந்தது. இதனால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடையும் சூழல் உருவானது. வெளி மாநிலங்களிலும் முட்டை நுகா்வு குறைந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, கடந்த மூன்று நாள்களில் முட்டை விலை 50 காசுகள் குறைந்தது.

இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது, மக்களிடையே முட்டை நுகா்வு குறைந்து வருவதால், தற்போதைக்கு விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதைக் கருத்தில்கொண்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 6-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. கடந்த நான்கு நாள்களில் முட்டை விலை 30, 20, 30 காசுகள் என மொத்தம் ரூ. 80 காசுகள் குறைந்துள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 110-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 105-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.