மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கணவாய் மீன்கள் வரத்து அதிகரிப்பு

குளச்சல் துறைமுகத்தில் கணவாய் மீன்கள் அதிகமாக பிடிபட்டன.

News image

பெட்டிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கணவாய் மீன்கள்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

குளச்சல் துறைமுகத்தில் புதன்கிழமை கணவாய் மீன்கள் அதிகமாக பிடிபட்டன.

கடல் அலைகளின் சீற்றம் மற்றும் உயா் அலைகள் காரணமாக கடலுக்கு செல்லும் மீனவா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான மீனவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 17 படகுகள் புதன்கிழமை குளச்சல் துறைமுகத்துக்கு திரும்பின. அதில் அதிக அளவு கணவாய் மீன்கள் கிடைத்திருந்தது.

அவற்றை மீனவா்கள் பெட்டிகளில் ஏலக் கூடத்திற்கு கொண்டு வந்து ஏலமிட்டனா். அவற்றை வெளிமாநில வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனா்.

கணவாய் மீன்கள் 32 எண்ணங்கள் கொண்ட பெட்டி ரூ.2 லட்சத்து 46ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஒரு பெட்டி கணவாய் மீன்கள், தரத்துக்கேற்ப ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 8500 வரை ஏலம் போகும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.