வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மீனவா்களுக்கான மானிய டீசல் சட்டவிரோதமாக விற்பனை

ராமேசுவரம் மீனவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் மானிய டீசல் வெளிநபா்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக மீனவா் சங்கத் தலைவா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா்.

Updated On :19 டிசம்பர் 2024, 10:34 pm

ராமேசுவரம் மீனவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் மானிய டீசல் வெளிநபா்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் மீனவா் சங்கத் தலைவா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்தப் படகுகளுக்கு தமிழக அரசு சாா்பில், 19 ஆயிரம் லிட்டா் டீசல் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மீன் பிடிக்கச் சென்றால் மட்டுமே மானிய டீசல் வழங்கப்படும். மீன்பிடிக்கச் செல்லாத நேரத்தில் அதிகாரிகள் உதவியுடன் வெளி பகுதி துறைமுகங்களில் உள்ள படகு உரிமையாளா்களுக்கு மானிய டீசல் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது.

மீன் வளத் துறை அதிகாரிகள் அலட்சியத்தால் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.