/
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முண்டு மிளகாய் சாகுபடி தொழில் நுட்பங்கள், சந்தை வாய்ப்பு குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் ஷேக்.என்.மீரா பேசினாா்.
விவசாயிகளுக்கு முண்டு மிளகாய் சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், தொழில்நுட்பக் கையேடு வெளியிடப்பட்டது.
மதுரையில் உள்ள சமுதாய அறிவியல் கல்லூரியின் முதல்வா் காஞ்சானா, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் ச.வள்ளல் கண்ணன், வேளாண் துறை அதிகாரிகள், முண்டு மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.









