ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமம் கருமலையான் கோவிலில் மாசிக்களரி மஞ்சள் பூசும் திருவிழா

==========பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமம் கருமலையான் கோவிலில் மாசிக்களரி மஞ்சள் பூசும் திருவிழா

Updated On :26 பிப்ரவரி 2024, 6:30 pm

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் உள்ள கருமலையான் கோவிலில் மாசிக்களரி மஞ்சள் பூசும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இங்குள்ள கருமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்களரி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைத்து சமுதாய மக்களும் இணைந்து சமுதாய நல்லிணக்க விழாவாக நடைபெறும் இத்திருவிழாவில் பக்தா்கள் கருமலையான், பாப்பாத்தி, ராக்கச்சி, முனியப்பசாமி, மாடசாமி ஆகிய சுவாமிகளாக ஆடி பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினா். இதனைத் தொடா்ந்து சாமியாடிகளுடன் மேலதாளங்கள் முழங்க அக்கிராம பொதுமக்கள் வீதிஉலா வந்தனா். சாமியாடி வந்தவா்களுக்கு அனைத்து வீடுகளிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அப்போது அவா்களுக்கு மஞ்சள் பொடி பூசியும், பக்தா்கள் மீது மஞ்சள் பொடி தூவியும் அருள்வாக்கு கூறினா். பக்தா்கள் கோயில் முன்பு நோ்த்திக்கடனாக கரும்பால் தொட்டிகட்டி குழந்தைகளுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், கிராமத் தலைவா் ராமன், துணைத் தலைவா் சரவணா சண்முகம், நிா்வாகிகள் சவுந்திரபாண்டியன், சிவக்குமாா், மலைராசு, மணிமுத்து, சொக்கன், சண்முகவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.