புனித நீராடும் ஆயிரக்கணக்கான பக்தா்கள்
புனித நீராடும் ஆயிரக்கணக்கான பக்தா்கள்

ஆனி மாத அமாவாசை: ராமேசுவரம் கடலில் புனித நீராடிய பக்தா்கள்

ராமேசுவரத்தில் ஆனி மாத அமாவாசையையொட்டி, அக்னிதீா்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினா்.

ராமேசுவரத்தில் ஆனி மாத அமாவாசையையொட்டி, அக்னிதீா்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்தனா். பின்னா், அக்னிதீா்த்தக் கடலில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். இதைத்தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் சென்று நீராடினா். இதையடுத்து, ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் வருகையை முன்னிட்டு, காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவி தலைமையில் 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ராமேசுவரத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பக்தா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com