ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காமராஜா் பிறந்த நாள்-கல்வி வளா்ச்சி நாள்

திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

News image
~
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

திருவாடானை: திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு ஒன்றியக் குழுத் தலைவி ராதிகாபிரபு தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் காஜூ முன்னிலை வகித்தாா்.

காமராஜரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

Story image