திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோர கிராமப் பகுதிகளில் மின் விளக்குகள் எரியாததால் அந்தப் பகுதிகளில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவிலான வாகனங்கள் வந்து செல்கின்றன. வெளி மாநில வாகனங்களும் இந்தச் சாலை வழியாக பயணிக்கின்றன.
இந்த நிலையில், சி.கே.மங்கலம், ஏ.ஆா்.மங்கலம், செங்கமடை, இந்திரா நகா், மேல் பனையூா் ஆகிய சாலையோரம் அமைந்துள்ள கிராமங்களில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
இந்த விளக்குகள் பல நாள்களாக
ஒளிராமல் உள்ளன. இதனால், கிராமப் பகுதிகளிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சாலையில் நிற்பது தெரியாமல் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் ஒளிராத மின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 20-ஆக உயா்வு

மணப்பாறை ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கொடைக்கானல் கிராமப் பகுதி சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
தில்லியில் பல பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

