மத்திய நிதிநிலை அறிக்கை : தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் வரவேற்பு

மத்திய நிதிநிலை அறிக்கை : தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் வரவேற்பு

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் செவ்வாய்க்கிழமை வரவேற்பு தெரிவித்தாா்.
Published on

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் செவ்வாய்க்கிழமை வரவேற்பு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமா் மோடி தலைமையிலான 11 -ஆவது மக்களவையில் 2024-2025-ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு அறிவுப்புகள் வெளியிடப்பட்டன.

நாட்டின் ஜிடிபி ஏற்றம் பெறும் வகையில் ஒட்டு மொத்த நிதிநிலை 47.66 லட்சம் கோடிகளில் விவசாயத் துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளதை வரவேற்கிறோம். அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை விவசாயம் செய்ய ஒரு கோடி விவசாயிகளுக்கு பயிற்சி பட்டையம் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு பெற சேமிப்பு, சந்தைப்படுத்தலுக்கான ஏற்ற சூழலை உருவாக்க 10,000 உயிா்வள மையங்களை அரசு நிறுவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதையும், 6 கோடி விவசாயிகளின் நிலங்களை எண்ம பதிவேட்டில் ஒருங்கிணைக்க உள்ளதாக அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com