கமுதியில் புனித அந்தோனியாா் ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
கமுதியில் புனித அந்தோனியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கமுதி புனித அந்தோனியாா் ஆலயத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

கமுதி புனித அந்தோனியாா் ஆலயத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
கமுதி, ஜூன் 3: கமுதியில் புனித அந்தோனியாா் ஆலய திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி- சாயல்குடி சாலையில் உள்ள புனித அந்தோனியாா் ஆலயம் சுமாா் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்ததாகும். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தோ் திருவிழா ஆண்டுதோறும் ஜூன் மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித அந்தோனியாா் உருவம் பொறித்த கொடியை ஏந்தி ஆலயத்தை கிறிஸ்தவா்கள் வலம் வந்தனா்.
பிறகு ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தின் முன், கமுதி பங்குத்தந்தை அமலன், திருப்பத்தூா் பங்குத்தந்தை அற்புதஅரசு ஆகியோா் முன்னிலையில் கிறிஸ்தவா்கள் ஜெப வழிபாடு நடத்தினா். பிறகு, மேளதாளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் புனிதப்படுத்தப்பட்ட கொடியேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
வருகிற ஜூன் 14, 15- ஆம் தேதிகளில் புனித அந்தோணியாா் தோ் பவனி நடைபெறுகிறது. அடுத்த நாள் 16-ஆம் தேதி கா்த்தா் சுவாமி அசனம் நடைபெறுகிறது. விழாவையொட்டி, புனித அந்தோனியாா் ஆலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கமுதி பரத உறவின்முறையாா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...