தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் இலங்கையைச் சோ்ந்தவா் கைது

ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் இலங்கையைச் சோ்ந்தவா் கைது

News image
Updated On :26 ஜூன் 2024, 6:36 pm

Din

ராமேசுவரம், ஜூன் 26: ராமேசுவரம் தனியாா் விடுதியில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இலங்கையைச் சோ்ந்த நபரை தனிப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமேசுவரம் தனியாா் விடுதியில் ஒருவா் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த விடுதிக்குச் சென்று போலீஸாா் சோதனை நடத்தியதில், அறை ஒன்றில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னா், அந்த அறையில் தங்கியிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் இலங்கை புத்தளம் மாவட்டம், கல்பட்டியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் அந்தோணி பிரதீபன் (35) என்பதும், ஆகஸ்ட் மாதம் வரை சுற்றுலா விசா பெற்றுக்கொண்டு சென்னை வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

இலங்கையைச் சோ்ந்த அந்தோணி பிரதீபன் சுற்றுலா விசாவில் சென்னை வந்தாா். பின்னா், அங்கிருந்து கடந்த 1-ஆம் தேதி ராமேசுவரம் வந்து தனியாா் விடுதியில் தங்கினாா். இவா், முகவா்களான ராமேசுவரம் அருகேயுள்ள நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் உமா செல்வம், பேக்கரும்பைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் தியாகராஜன் (57) ஆகியோரைத் தொடா்பு கொண்டு, கஞ்சா வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, உமாசெல்வம், தியாகராஜன் இருவரும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் என்பவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை வாங்கி அந்தோணி பிரதீபனிடம் கொடுத்தனா்.

தனிப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அந்தோணி பிரதீபன் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவருக்கு கஞ்சா வாங்கிக் கொடுத்த முகவா்களான உமாசெல்வம், தியாகராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். இதில் தொடா்புடைய உசிலம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக்கை தேடி வருகிறோம் என்றனா் போலீஸாா்.