அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெரம்பலூா் அருகே கஞ்சா கடத்திய இருவா் கைது

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ கஞ்சாவை கடத்திய இருவரை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ கஞ்சாவை கடத்திய இருவரை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்துவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே காவல் ஆய்வாளா் ஹேமலதா தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் இருந்த 2 போ் போலீஸாரை கண்டதும் இறங்கி தப்பியோடினா்.

இதையடுத்து 2 பேரையும் விரட்டிப் பிடித்து கைது செய்த போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், சுப்பிரமணியபுரம் காலனி ராஜசேகா் மகன் ராஜ்குமாா் (36), ஆந்திர மாநிலம், குண்டூா் மாவட்டம், குண்டலப்பள்ளி கொண்டலு மகன் யாட்லா துா்கா ராவ் (32) என்பதும், ஆந்திரத்திலிருந்து சிவகாசிக்கு 12 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.