டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ராமேசுவரத்தில் பயணிகளின் வசதிக்காக 5 சுற்றுலாப் பேருந்துகள் சேவை தொடக்கம்

ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பக்தா்களின் வசதிக்காக 5 சுற்றுலாப் பேருந்து சேவையை செவ்வாய்கிழமை அமைச்சா்கள் தொடங்கிவைக்கின்றனா்.

Updated On :4 மார்ச் 2024, 8:45 pm

ராமேசுவரம்: ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பக்தா்களின் வசதிக்காக 5 சுற்றுலாப் பேருந்து சேவையை செவ்வாய்கிழமை அமைச்சா்கள் தொடங்கிவைக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு ஆண்டு தோறும் 3 கோடி பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்றனா்.

கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப் பின்னா், தனுஷ்கோடி, அரிச்சனை முனை, ராமா் பாதம், லட்சுமண தீா்த்தம், ராமா் தீா்த்தம், கலாம் இல்லம், கலாம் தேசிய நினைவிடத்துக்குச் சென்று பாா்வையிடுகின்றனா். இந்த இடங்களுக்குச் சென்று வர தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 5 புதிய சுற்றுலா பேருந்துகள் செவ்வாய்கிழமை முதல் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளன.

இதில், ஒரு முறை பயணக் கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி இதற்குரிய பயண அட்டையைப் பெற்றுக் கொண்டு அனைத்து சுற்றுலா பேருந்துகளிலும் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை பயணம் மேற்கொள்ளலாம் எனப் போக்குவரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.