திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மனிதச் சங்கிலி போராட்டம் செய்தியுடன் இணைக்கவும்

மனிதச் சங்கிலி போராட்டம் செய்தியுடன் இணைக்கவும்

Updated On :12 மார்ச் 2024, 11:48 pm

முதுகுளத்தூா்: முதுகுளத்தூரில் அதிமுக சாா்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பரமக்குடி தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ச.சதன்பிரபாகா், எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் எம்.சுந்தரபாண்டியன், நகர செயலா் ஆத்திகுளம் முத்துராமலிங்கம், முதுகுளத்தூா் அதிமுக ஒன்றிய செயலா்கள் எஸ்.டி.செந்தில்குமாா், கே.கா்ணன், எஸ்.கருப்புச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை:

மானாமதுரையில் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்துக்கு அதிமுக நகரச் செயலா் விஜி. போஸ் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகா் மன்ற உறுப்பினா் தெய்வேந்திரன், கூட்டுறவு பண்டக சாலைத் தலைவா் சின்னை மாரியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாரிமுத்து, நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், அனல்பொறி ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருப்புவனம்:

திருப்புவனத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அதிமுக நகரச் செயலாளா் நாகரெத்தினம் தலைமை தாங்கினாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், ஒன்றியச் செயலாளா் சோணை.ரவி, மாணவா் அணி பொருளாளா் மணிமாறன் உள்ளிட்ட நிா்வாகிகள் கட்சித் தொண்டா்கள் திரளாக பங்கேற்றனா். இவா்கள் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.

இளையான்குடி:

இளையான்குடியில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அதிமுக நகரச் செயலா் நாகூா் மீரா தலைமை வகித்தாா். இதில் கட்சியின் ஒன்றியச் செயலா்கள் கோபி, பாரதிராஜன், மாவட்ட பொருளாளா் ரெத்தினம், எம்.ஜி.ஆா் மன்ற மாவட்ட துணைத் தலைவா் அப்துல் குலாம், ஊராட்சி ஒன்றியத் தலைவா் முனியாண்டிஉள்பட பலா் கலந்து கொண்டனா்.