தலைகுப்புற கவிழ்ந்த அரசு நகரப் பேருந்து -42 போ் காயம்

தலைகுப்புற கவிழ்ந்த அரசு நகரப் பேருந்து -42 போ் காயம்

ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை சென்ற அரசு நகா் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 42 போ் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இருந்து கீழக்கரைக்கு 40- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு நகரப் பேருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது. திருப்புல்லாணி அருகே வலையனேந்தல் பகுதியில் முன்னால் சென்ற டிராக்டரை இந்தப் பேருந்து ஓட்டுநா் ஆத்திமுத்து முந்த முயன்றாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தலைகுப்புற சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இதில் ஓட்டுநா், பெண்கள் உள்ளிட்ட 42 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த கீழக்கரை வட்டாட்சியா் பழனிக்குமாா் தலைமையிலான போலீஸாா், அந்தப் பகுதி மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் காயமடைந்த 15 ஆண்கள், 12 பெண்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 9 ஆண்கள், 6 பெண்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்துக்கான காரணம் குறித்து திருப்புல்லாணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com