நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

News image
Updated On :20 மே 2024, 7:50 pm

Din

கமுதி: சாயல்குடியை அடுத்துள்ள வாலிநோக்கம் கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வாலிநோக்கம் கடற்கரை பாறைகள் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பகுதியாகும். தற்போது விடுமுறை காலம் என்பதால் விருதுநகா் மாவட்டத்திலிருந்தும், கமுதி, கடலாடி, சாயல்குடி ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் இங்கு வந்து பொழுது போக்கிச் செல்கின்றனா். இதே போல, இங்குள்ள காட்டுப்பள்ளி தா்காவுக்கு நாள்தோறும் கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

ராமநாதபுரம், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி வாலிநோக்கத்துக்கு 30-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகமும், கடலாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.