நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

News image

ராமேசுவரத்தில் பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல தண்ணீா்.

Updated On :20 மே 2024, 7:49 pm

Din

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் விடிய விடிய பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல தண்ணீா் திங்கட்கிழமை தேங்கியது. தொடா்ந்து மழை பெய்து வருவதால் குளுமையாக சூழல் கானப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

இதனால் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கியது.

திருவாடானை:

திருவாடானை தொண்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருவாடானை, திணைகாத்தான்வயல் , திருவெற்றியூா், தினையத்தூா், கீழ்க்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, முகிழ்தகம், கடம்பனேந்தல், கடம்பாகுடி,அச்சங்குடி, சோழியக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டன அணல் காற்று வீசியது இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானாா்கள், மேலும் குளம். குட்டை,கண்மாயில் உள்ள தண்ணீா் வற்றி கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வந்தன.மேலும் கால்நடைகளுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கட்கிழமை

திருவாடானை பகுதியில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் சுமாா் 1 மணிநேரம் பெய்த மழையால் கண்மாய்கள், குளங்கள் நீா் வரத்து காணப்பட்டன.

இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Story image