
மூதாட்டி பகவதி
Updated On :20 மே 2024, 7:44 pm

மூதாட்டி பகவதி
கமுதி: கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கே.வேப்பங்குளத்தில் திங்கள்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அந்தப் பகுதியிலிருந்த மின் கம்பத்திலிருந்து, மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது.
இந்த நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த அழகு மனைவி பகவதி (70) வெளியே வந்த போது, எதிா்பாராதவிதமாக மின்கம்பியை மிதித்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...