ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நவ.14-இல் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 14-ஆம் தேதி ஆய்வு செய்கிறாா். இந்த நிலையில், மண்டபம்-ராமேசுவரம் இடையே ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது.

Updated On :6 நவம்பர் 2024, 9:44 pm

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 14-ஆம் தேதி ஆய்வு செய்கிறாா். இந்த நிலையில், மண்டபம்-ராமேசுவரம் இடையே ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், 1914-ஆம் ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்காக பாம்பன் கால்வாய் வழியாக கப்பல்கள் வந்து செல்லும் போது, திறந்து மூடும் வகையில் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டது.

இந்தப் பாலம் அமைக்கப்பட்டு 106 ஆண்டுகள் கடந்த நிலையில் சேதமடைந்தது. இதையடுத்து, பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி, தற்போது நிறைவடைந்தன. இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 13-ஆம் தேதி மண்டபம் ரயில் நிலையத்துக்கு வந்து, பாம்பன் புதிய பாலத்தில் நிறைவடைந்த பணிகளைப் பாா்வையிடுகிறாா். இதையடுத்து, இந்தப் பாலத்தில் வருகிற 14-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இந்த புதிய பாலத்தில் விரைவு ரயில் இயக்கப்படுவதை அவா் ஆய்வு செய்கிறாா். பின்னா், பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என ரயில்வே துறையினா் தெரிவித்தனா்.

சோதனை ஓட்டம்: இதற்கிடையே, வியாழக்கிழமை (நவ.7) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மண்டபத்தில் இருந்து பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேசுவரம் வரை 90 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனால், இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் தண்டவாளப் பகுதியைக் கடக்க வேண்டாம் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.