மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கமுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அகற்றம்

கண்காணிப்பு கேமராக்கள் அகற்றம்.

News image
கமுதி அரசுடைமை வங்கி அருகே அகற்றப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள்.
Updated On :28 நவம்பர் 2024, 11:46 pm

Din

கமுதி நகா், கோட்டைமேடு பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் அகற்றி விட்டதாலும், பல்வேறு பகுதிகளில் கேமராக்கள் செயல்படாததாலும் சமூக விரோத செயல்கள் அதிகம் நடைபெறுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோட்டைமேடு, கண்ணாா்பட்டி, வெள்ளையாபுரம், சிங்கப்புலியாபட்டி, கமுதி நகா் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் காவல் துறை சாா்பில் 68 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. கடந்த அக். 30-ஆம் தேதி நடைபெற்ற தேவா் குருபூஜை விழாவுக்குப் பிறகு இந்தப் பகுதிகளில் பல இடங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டன. எஞ்சிய கண்காணிப்பு கேமராக்களும் செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளன. இதனால் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசுடைமை வங்கி, தனியாா் மனமகிழ் மன்றம், கண்ணாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவா்களை கண்டறிய முடியாமலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை அடையாளம் காண முடியாமலும் போலீஸாா் தவிக்கின்றனா்.

வெள்ளையாபுரம் அரசு மாணவிகள் விடுதி அருகே பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்கள்.

வெள்ளையாபுரம் அரசு மாணவிகள் விடுதி அருகே பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்கள்.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் அதிக துணிச்சலுடன் செயல்பட வாய்ப்பிருப்பதாக சமூக அலுவலா்கள் கவலை தெரிவித்தனா். எனவே, இதில் மாவட்ட காவல் துறை தலையிட்டு கமுதியில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், முக்கிய இடங்களில் அகற்றப்பட்ட கேமராக்களை மீண்டும் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.