மீனங்குடி கிராமத்தில் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் காத்திருந்த பெண்கள்.
மீனங்குடி கிராமத்தில் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் காத்திருந்த பெண்கள்.

மீனங்குடி கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு

கடலாடி அருகே உள்ள மீனங்குடி கிராமத்தில் பல நாள்களாக காவிரி கூட்டுக் குடிநீா் வராததால் கிராம மக்கள் திண்டாடுகின்றனா்.
Published on

கடலாடி அருகே உள்ள மீனங்குடி கிராமத்தில் பல நாள்களாக காவிரி கூட்டுக் குடிநீா் வராததால் கிராம மக்கள் திண்டாடுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், மீனங்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். கடலாடியிலிருந்து நரசிங்க கூட்டம் வழியாக மீனங்குடிக்கு காவிரி கூட்டுக் குடிநீா் வழங்கப்பட்டு வந்த நிலையில், பல நாள்களாக இங்கு காவிரி கூட்டுக் குடிநீா் வராததால் குடிநீருக்காக காலி குடங்களுடன் குழாய் அமைந்திருக்கும் இடத்தில் கிரா மக்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு தண்ணீா் வந்தாலும் 2 அல்லது 3 குடங்களுக்கு மேல் தண்ணீா் பிடிக்க முடியவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், பள்ளிக்கு குழந்தைகளை முறையாக அனுப்ப முடியவில்லை, வேலைக்குச் செல்ல முடியவில்லை என வேதனையுடன் பொதுமக்கள் தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, மீனங்குடி கிராமத்தில் நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com