ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், மீன்பிடி இறங்குதளத்தில் புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.
ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், மீன்பிடி இறங்குதளத்தில் புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.

ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை (அக். 3) நடைபெறுகிறது.
Published on

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா். இதனால், 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்வதும், விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா்ந்து நிகழ்கிறது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதனால், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் 560- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று உண்ணாவிரதம்:

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை (அக். 3) நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com