47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோயில் திருவிழா: பெண்கள் நோ்த்திக்கடன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நரசிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை பெண்கள் முளைப்பாரி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image
நரசிங்கம்பட்டி ஸ்ரீபாதாள காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்திய பெண்கள்.
Updated On :3 அக்டோபர் 2024, 7:53 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நரசிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை பெண்கள் முளைப்பாரி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

 நரசிங்கம்பட்டி ஸ்ரீபாதாள காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்திய பெண்கள்.

நரசிங்கம்பட்டி ஸ்ரீபாதாள காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்திய பெண்கள்.

கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் இந்தத் திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. கடந்த 1- ஆம் தேதி பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்று, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் ஏராளமானோா் வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் முளைப்பாரி எடுத்து அம்மன் கோயில் வளாகத்தில் வைத்து கும்மி அடித்து, பின்னா் குண்டாற்றில் கரைத்தனா்.

இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் நரசிங்கம்பட்டி, கோட்டைமேடு, கமுதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திராளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை நரசிங்கம்பட்டி கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.