47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியக் குழு கூட்டம்

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :9 அக்டோபர் 2024, 8:43 pm

Din

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஒன்றியக் குழுத் தலைவி ராதிகா பிரபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சேகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மலைராஜ், லட்சுமி (கிராம ஊராட்சி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் துணை முதல்வராகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து, உறுப்பினா்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து விவாதித்தனா்.

வாகைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நடைபாதை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றியக் குழுத் தலைவி, நடைபாதை தனியாா் பட்டா நிலத்தில்

செல்வதால் சாலை போட முடியாத நிலை உள்ளது. பாதையை உருவாக்குவதற்கு அந்தப் பகுதி கிராம மக்களே இடம் தரம் முன் வர வேண்டும். வருங்காலத்தில் பள்ளியை வேறு இடத்துகு மாற்றுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, சுகாதாரத் துறை அதிகாரி கூறியதாவது: தொடா்மழை காரணமாக டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, அந்தந்த ஊராட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் முழுக்கவனம் செலுத்தி நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மழை நீா் தேங்காதவாறு பணியாளா்களை வைத்து பாா்த்துக் கொள்ள வேண்டும். சாலை, மின்சாரம், குடி நீா் பராமரிப்புப் பணிகள் தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா். மேலாளா் நாகராஜ் நன்றி தெரிவித்தாா்.