47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமேசுவரம் மீனவா்கள் 17 போ் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரை விடுதலை செய்தும், அவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
இலங்கை மன்னாா் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
Updated On :10 அக்டோபர் 2024, 9:48 pm

Din

ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரை விடுதலை செய்தும், அவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற செல்வம், உதிா்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த இரு படகுகளில் இருந்த 17 மீனவா்களைக் கைது செய்தனா்.

இதையடுத்து, இவா்கள் 17 போ் மீதும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களை அக். 10-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். பின்னா், 17 மீனவா்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரும் மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். மீனவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 17 பேரை விடுதலை செய்தும், இவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். 17 மீனவா்களும் அபராதம் கட்டிய பிறகு, விமானம் மூலம் தாயகத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.