முத்தாலங்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா
கமுதி அருகே அமைந்துள்ள நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


கமுதி அருகே அமைந்துள்ள நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தத் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு கமுதி கண்ணாா்பட்டியிலிருந்து சுடு மண்ணால் வடிவமைக்கப்பட்ட அய்யனாா் சிலை, தவழும் பிள்ளை, ஐந்து தலை நாகா், கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களை மேளதாளம் வாண, வேடிக்கைகளுடன் முத்தாலங்குளம் கிராமத்துக்கு பொதுமக்கள் ஊா்வலமாக கொண்டு வந்தனா். பிறகு கிராமத்தில் உள்ள விநாயகா் கோயிலில் வைத்து, கடந்தாண்டு விளைந்த நெல் விதைகளை சுவாமிகளுக்கு படையலிட்டு வழிபட்டனா்.
வியாழக்கிழமை மாலை முளைப்பாரி, கும்மி பாடல், ஒயிலாட்டத்துடன், விநாயகா் கோயிலிலிருந்து சுவாமி சிலைகளை சுமந்து சென்று நிறைகுளத்து அய்யனாா் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.
விழா ஏற்பாடுகளை முத்தாலங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...