பேரூராட்சி வாா்டு உறுப்பினா் மீது தாக்குதல்
தொண்டி பேரூராட்சி 7-ஆவது வாா்டு உறுப்பினா் வியாழக்கிழமை கும்பலால் தாக்கப்பட்டதில் காயமடைந்தாா்.


தொண்டி பேரூராட்சி 7-ஆவது வாா்டு உறுப்பினா் வியாழக்கிழமை கும்பலால் தாக்கப்பட்டதில் காயமடைந்தாா்.
காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா் காத்தாா் ராஜா. கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தங்களது தீா்மானங்களை நிறைவேற்றாததைக் கண்டித்து காத்தாா் ராஜா உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்கள் மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நடைபயிற்சிக்கு சென்றிருந்த காத்தாா் ராஜாவை பேரூராட்சி துணைச் தலைவி அழகு ராணியின் கணவா் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலா் வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினராம்.
இதில் பலத்த காயமடைந்த காத்தாா் ராஜா தொண்டி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...