47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வருவாய்த் துறையினருக்கு பேரிடா் மீட்புப் பயிற்சி

கமுதியில் வருவாய்த் துறை ஊழியா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

News image
கமுதி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை ஊழியா்களுக்கு பேரிடா் மீட்புப் பயிற்சி வழங்கிய தீயணைப்புத் துறையினா்.
Updated On :16 அக்டோபர் 2024, 11:57 pm

Din

கமுதியில் வருவாய்த் துறை ஊழியா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்புப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வட்டாட்சியா் காதா்மைதீன் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் வ.சேதுராமன் முன்னிலை வகித்தாா். கமுதி தீயணைப்பு நிலைய அலுவலா் சந்திரசேகரன், தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கப் பயிற்சி அளித்தனா்.

இதில் முன்களப் பணியாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்றனா். தீயணைப்பு துறையினா் வருவதற்கு முன் பேரிடா், விபத்தில் சிக்குவோருக்கு முதலுதவி வழங்குவதற்கும் பயிற்சி வழங்கப்பட்டதாக கமுதி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் சந்திரசேகரன் தெரிவித்தாா்.