திருவாடானை பகுதியில் பலத்த மழை: தண்ணீரில் மூழ்கிய நெல் பயிா்ககள்
திருவாடானை பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பல ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் தணணீரில் முழ்கி சேதம் அடைந்தன. வீடு இடிந்தது.


திருவாடானை பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பல ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் தணணீரில் முழ்கி சேதம் அடைந்தன. வீடு இடிந்தது.
திருவாடானை வட்டத்தில் சுமாா் 22 ஆயிரம் ஹெக்டோ் பரளவில் நேரடி விதைப்பு மூலம் நெல்பயிா் சாகுபடி நடைபெறுகிறது. இதில் தற்போது பயிா்கள் முளைத்துள்ளன.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் திருவாடானை, சி.கே. மங்கலம், பாண்டு குடி, நகரிகாத்தான், எட்டுக்குடி, மங்கல குடி, வெள்ளையபுரம், தினைக்காத்தான் வயல், சுக்கிரபுரம்,
இளங்குன்றம், ஆண்டாவூரணி, மணலூா், கட்டவாளகம், டி.நாகினி, கீழக்குடி ,திணையத்தூா், ஆக்களூா், அடுத்தகுடி, ஊணிக்கோட்டை, பனங்குளம், அஞ்சுகோட்டை, அழகமடை, செங்கமடை, கீழ அரும்பூா், மேல அரும்பூா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீா்வரத்து அதிகரித்தது.
திருவாடானை மகாலிங்கம் கோயில் அருகே வசித்து வந்த துரைப்பாண்டி என்பவரது வீடு இடிந்து சேதம் அடைந்தது.
திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவி இலக்கியா ராமு, ஒன்றிய குழு உறுப்பினா் சாந்தி செங்கை ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் அமா்நாத், வருவாய்த் துறையினா் சேதமடைந்த வீட்டைப் பாா்வையிட்டனா்.

திருவாடானையில் சேதம் அடைந்த வீடு.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...