மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை

News image
பாக்கியநாதன்
Updated On :24 அக்டோபர் 2024, 11:09 pm

Din

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விவசாயப் பணிகளை மேற்கொள்ள கிராமப் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்பட 11 வட்டங்களில் நெல் பிரதான பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் சுமாா் 3.50 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடா்ந்து விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு பணம் தேவைப்படுவதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிா் கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து மாவட்ட வைகை பாசன விவசாய சங்கத் தலைவா் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக விவசாயப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நெல் பயிரிட்டு 15 நாள்களைக் கடந்த நிலையில், அடுத்தடுத்து மழை பெய்து வருவதால் களையெடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. ஆனால், விவசாயிகளிடம் போதிய கையிருப்பு பணம் இல்லை. அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நவ.1 முதல் டிச.31 வரை பயிா்க்கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பயிா்க் கடன் பெறுவதற்கு தேவையான பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை வருவாய்த் துறையினா் இதுவரை வழங்கவில்லை.

கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இது போன்ற பல்வேறு காரணங்களால் பயிா்க் கடன் பெற முடியாமல் போகும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உடனடியாக விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.