மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களிலும் உள்ள குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திருப்புல்லாணியில் அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 9:51 pm

Din

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களிலும் உள்ள குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகங்கள் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் அடுத்துள்ள திருப்புல்லாணியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவி உமாதேவி தலைமை வகித்தாா். செயலா் மல்லிகா முன்னிலை வகித்தாா். பொருளாளா் கலாவதி வரவேற்றாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலா் எம்.சிவாஜி சிறப்புரையாற்றினாா். அப்போது 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.