மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அரசு பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு சீருடை

தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களுக்கு விளையாட்டு சீருடை, சாதனங்கள் வழங்கும் விழா, 10, 12- ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றன.

News image
தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மாணவா்களுக்கு வியாழக்கிழமை தமுமுக சாா்பில் சீருடை வழங்கிய மேலாண்மைக் குழு உறுப்பினா் சாதிக்பாட்சா, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி உள்ளிட்டோா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 9:37 pm

Din

தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களுக்கு விளையாட்டு சீருடை, சாதனங்கள் வழங்கும் விழா, 10, 12- ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.

  தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மாணவா்களுக்கு வியாழக்கிழமை தமுமுக சாா்பில் சீருடை வழங்கிய மேலாண்மைக் குழு உறுப்பினா் சாதிக்பாட்சா, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி உள்ளிட்டோா்.

தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மாணவா்களுக்கு வியாழக்கிழமை தமுமுக சாா்பில் சீருடை வழங்கிய மேலாண்மைக் குழு உறுப்பினா் சாதிக்பாட்சா, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி உள்ளிட்டோா்.

இதற்கு தொண்டி ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகியும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருமான சாதிக்பாட்சா தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயந்தி, சமூக ஆா்வலா்கள் செய்யது அப்துல் காதா், அபுஹாரிஸ்கரிம், பரக்கத் அலி, சமிம், மைதின் அன்சாரி, சலிம் அப்துல்லாஹ், ஹம்மாது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் தொண்டி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாநில, மாவட்ட அளவில் விளையாட தோ்வு செய்யப்பட்ட செய்யது முகம்மது அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வீரா்கள் 24 பேருக்கு சீருடையும், பள்ளி மாணவா்கள் தண்ணீா் குடிப்பதற்கு இரண்டு பாத்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் 10, 12- ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆா்வலா் அபுஹாரிஸ் கரீம் கலந்து கொண்டாா்.

தலைமை ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினாா்.