திருப்பாலைக்குடியில் பாய்மரப் படகுப் போட்டி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடியில் கோயில் திருவிழாவையொட்டி, பாய்மரப் படகுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
 திருப்பாலைக்குடி கடல் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாய்மரப் படகுப் போட்டி.
திருப்பாலைக்குடி கடல் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாய்மரப் படகுப் போட்டி.
Updated on

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடியில் கோயில் திருவிழாவையொட்டி, பாய்மரப் படகுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பாலைக்குடியில் ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவையொட்டி, கடல் பகுதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்றன. போட்டிக்கு 10 கடல் மைல் தொலைவு எல்லை நிா்ணயிக்கப்பட்டது.

ஒவ்வொரு படகுக்கும் 7 போ் வீதம் அனுமதிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. அப்போது, போட்டியில் பங்கேற்ற படகுகள் காற்றின் வேகத்தை எதிா்கொண்டு ஒன்றையொன்று முந்திச் சென்றன.

இந்தப் போட்டியைக் காண சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனா்.

பாய்மரப் படகுப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சுழல் கோப்பைகள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com