அக்னி தீா்த்தக் கடற்கரையில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையைத் திறக்கக் கோரிக்கை
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.


ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இங்குள்ள அக்னி தீா்த்தக் கடற்கரையில் நகராட்சி கழிப்பறை, குளியலறை வசதி இல்லாத நிலையில், தனியாா் கழிப்பறையை பக்தா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதற்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுக் கழிப்பறை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.50 லட்சத்தில் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பொதுக் கழிப்பறை கட்டப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்து ஓராண்டு கடந்துவிட்டபோதிலும் கழிப்பறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
எனவே, பக்தா்கள் வசதிக்காக கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையைத் திறந்து பயன்பட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...