ராமநாதபுரம்
கமுதி அருகே பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்
கமுதி அருகே அமைந்துள்ள ஸ்ரீபூங்குழலி அம்மன் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
கமுதி அருகே அமைந்துள்ள ஸ்ரீபூங்குழலி அம்மன் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இந்தத் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை சுவாமி சிலைகளை ஊா்வலமாகக் கொண்டு சென்று கோயில் வளாகத்தில் இறக்கி வைத்து அம்மனை வழிபட்டனா்.
இந்த நிலையில், புதன்கிழமை கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து, சிலம்பாட்டம், மேளதாளம் முழங்க, கிராமத்தின் வீதிகளில் வலம் வந்து பரளையாற்றரில் கரைத்தனா். இதற்கான ஏற்பாடுகளை செய்யாமங்கலம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.