47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதுகுளத்தூா் பாலம் கட்டுமானப் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

முதுகுளத்தூரில் ரூ.3.85 கோடியில் புதிய பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்து, பணிகளை மழைக் காலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டாா்.

News image
முதுகுளத்தூரில் புதிய பாலம் கட்டும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ஜி.முருகன்.
Updated On :25 செப்டம்பர் 2024, 9:27 pm

Din

முதுகுளத்தூரில் ரூ.3.85 கோடியில் புதிய பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்து, பணிகளை மழைக் காலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வழியாகச் செல்லும் தஞ்சாவூா்-சாயல்குடி தேசிய நெடுஞ்சாலையில் முதுகுளத்தூரில் உள்ள ஆற்றுப் பாலத்துக்கு இணையாக புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. முதுகுளத்தூா்- அபிராமம்-பரமக்குடி சாலை சந்திப்பில் உள்ள பாலம் குறுகலாக அமைந்துள்ளதால் எதிரெதிரே வரும் வாகனங்கள் கடக்க முடியாத நிலை உள்ளது. மருத்துவ அவசர ஊா்திகள், தீயணைப்பு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை சரிசெய்யும் வகையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் 2023-24-இன் கீழ், ரூ.3.85 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை ராமநாதபுரம் கோட்டப் பொறியாளா் முருகன் ஆய்வு செய்தாா். அப்போது, மழைக் காலத்துக்கு முன்பு விரைந்து பணிகளை முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ரெங்கபாண்டியன், ரா.நவநீதகிருஷ்ணன், உதவிப் பொறியாளா்கள் மகேஸ்வரன், இமயவரம்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.