ராமநாதபுரம் மாவட்டத்தில் கைத்தறி ஜவுளி விற்பனை நிலையம் அமைக்கக் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கைத்தறி ஜவுளி விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என அனைத்து கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா் கோரிக்கை விடுத்தனா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் கைத்தறி ஜவுளி விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என அனைத்து கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா் கோரிக்கை விடுத்தனா்.
இந்த அமைப்பின் தலைவா் கே.ஜி.சேஷய்யன், செயலா்கள் டி.ஆா்.கோதண்டராமன், பொருளாளா் எம்.பி.ருக்மாங்கதன், பொருளாளா் எம்.சி.கணேஷ்பாபு ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சிம்ரஞ்ஜீத் சிங் காலோனிடம் அளித்த மனு விவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சரகம் கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் நிறுவனங்கள் தற்போது தொடக்க நடவடிக்கையில் உள்ள மினி ஜவுளி பூங்கா மூலம் உற்பத்தி செய்யும் ஜவுளி ரகங்களை சந்தைப்படுத்த தேசிய அளவில் வாடிக்கையாளா்களைக் கவரும் வண்ணம் ராமநாதபுரம் மாவட்டத்தில் விற்பனை நிலையம் அமைக்க வேண்டும்.
பரமக்குடி நகராட்சி, எமனேசுவரம் 6-ஆவது வாா்டு பகுதியில் உள்ள தொன்மையான மாமாங்க தெப்பக்குளம் கழிவுநீா் தேங்கி மாசுபட்டு காணப்படுகிறது. இதனால், நிலத்தடி நீா் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் அந்தக் குளத்தை சீரமைத்து குளத்தின் கரைப் பகுதியில் நடைபயிற்சிக்கான தளம் அமைக்க வேண்டும், பரமக்குடி-எமனேசுவரம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...