தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாரம்பரிய சிறுதானிய உணவுக் கண்காட்சி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், பாரம்பரிய சிறுதானிய உணவுக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
படவிளக்கம். (கேஎம்யு25உணவு) கமுதியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் சிறுதானிய ஊட்டச்சத்து உணவுக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்ச்செல்விபோஸ்.
Updated On :25 செப்டம்பர் 2024, 8:22 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், பாரம்பரிய சிறுதானிய உணவுக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்தக் கண்காட்சியை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவி தமிழ்ச்செல்வி போஸ் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா்.

மேலும், ஊட்டச்சத்து மிகுந்த

சிறுதானிய உணவு வகைகளின் பயன்கள் குறித்து அவா் எடுத்துரைத்தாா்.

மண்டல உதவித் திட்ட அலுவலா் அழகப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோட்டை ராஜ், சந்திரமோகன் (கிராம ஊராட்சிகள்), துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்தியேந்திரன், பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கமுதி வட்டாரத்தில் உள்ள 53 ஊராட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள்

Story image

எள் உருண்டை, வாழைப்பூ வடை, கேழ்வரகு அடை, உளுந்து கஞ்சி, சோள உப்புமா, குதிரைவாலி அரிசி சோறு, கேழ்வரகு களி, தினை மாவு உருண்டை, வரகு அரிசி பாயசம், குதிரைவாலி தேங்காய் சாதம், வாழைக்காய் புட்டு, கருப்புகவுனி பணியாரம், வரகு பிரியாணி, ராகி அடை, உளுந்து பாயசம், பச்சைப் பயறு தோசை, கேழ்வரகு சேவு, கோதுமை சுவியம், கம்பரிசி லட்டு, கேழ்வரகு இடியாப்பம், தினை உப்புமா உள்பட 200 வகையான சிறுதானிய உணவுகளை செய்து கண்காட்சியில் வைத்திருந்தனா்.

இந்தக் கண்காட்சியில் சிறப்பான உணவுகளை சமைத்த நத்தம் ஊராட்சி மகளிா் குழுவினா் முதல் பரிசும், மண்டலமாணிக்கம் மகளிா் குழுவினா் 2-ஆம் பரிசும், சடையனேந்தல் மகளிா் குழுவினா் 3-ஆம் பரிசும் பெற்றனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளா் மயில்ராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் திரவியம், சாந்தி, மாரிமுத்து, பில்லத்தியான், தமிழரசிஆகியோா் செய்தனா்.