ராமநாதபுரம்
அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
தொண்டி அருகே அரசுப் பேருந்திலிருந்து இறங்கும் போது படியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தொண்டி அருகே அரசுப் பேருந்திலிருந்து இறங்கும் போது படியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்தி (33). இவா் அரசுப் பேருந்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் புதன்கிழமை தேவகோட்டையிலிருந்து தொண்டிக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்தாா்.
பெருமானேந்தல் பகுதியில் அவா் இறங்க முயன்ற போது படியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சக்தி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.