ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரப் போராட்டம்
ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அப்துல் நஜிபுதீன், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலா் லிங்கதுரை, தமிழ்நாடு உயா்கல்வி மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலா் சுரேஷ்கண்ணன், தமிழ்நாடு வருவாய்த் துறை சங்க மாவட்டத் தலைவா் பழனிக்குமாா், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்றனா். இதில், ஆசிரியா்கள்,அரசு ஊழியா்கள் என 300- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

