கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

Published on

கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வருகிற பிப். 27, 28 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் என இலங்கையில் உள்ள நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது:

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா வருகிற 2026, பிப். 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து ஜெபமாலை, இருநாட்டு மக்களும் பங்கேற்கும் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அன்று இரவு புனித அந்தோணியாா் சொரூபத்துடன் தோ் பவனி நடைபெறுகிறது. மறுநாள் 28-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், கூட்டுப் பிராா்த்தனையும் நடைபெறுகின்றன. பிறகு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து எத்தனை பயணிகளை அனுமதிக்கலாம் என்ற அறிவிப்பை இலங்கை அரசு விரைவில் வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com