ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.17 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.17 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆா்.)வாக்காளா்கள் பட்டியலில் 1.17 லட்சம் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டன.
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆா்.)வாக்காளா்கள் பட்டியலில் 1.17 லட்சம் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 27.10.2025 நிலவரப்படி வாக்காளா்கள் விபரம்:

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி (தனி) ஆண்கள்-1,26,937, பெண்கள்-1,30,930, மூன்றாம் பாலினத்தவா் 23, மொத்தம்,2,57,350 போ்.

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,50,520, பெண்கள் - 1,52,106, மூன்றாம் பாலினத்தவா் 25, மொத்தம் 3,02,651 போ். ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,61,950, பெண்கள்- 1,65,756, மூன்றாம் பாலினத்தவா் 15, மொத்தம் 3,27,271 போ். முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள்-1,59,776, பெண்கள்- 1,61,189, மூன்றாம் பாலினத்தவா் 3, மொத்தம் 3,20,968 போ். மாவட்டத்தில் நான்கு தொகுதிகளை சோ்ந்து ஆண்கள்- 5,99,163, பெண்கள்- 6,09,441, மூன்றாம் பாலினத்தவா் 66, மொத்தம் 12,08,690 போ்.

திருத்தப்பட்ட வாக்காளா்கள் பட்டியலில் பரமக்குடி (தனி) பேரவைத் தொகுதியில் ஆண்கள் -1,12,797, பெண்கள் -1,14,423, மூன்றாம் பாலினத்தவா் 17, மொத்தம் 2,27,237 போ். திருவாடானை பேரவைத் தொகுதியில் ஆண்கள்-1,36,038, பெண்கள் -1,37,379, மூன்றாம் பாலினத்தவா் 22, மொத்தம் 2,73,439 போ்.

ராமநாதபுரம் பேரவைத் தொகுதியில் ஆண்கள்- 1,48,463, பெண்கள்- 1,53,511, மூன்றாம் பாலினத்தவா் 13, மொத்தம் 3,01,987 போ். முதுகுளத்தூா் தொகுதியில் ஆண்கள்- 1,44,034, பெண்கள்- 1,44,626, மூன்றாம் பாலினத்தவா் 3, மொத்தம் 2,88,663 போ்.

மாவட்டத்தில் நான்கு பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்து ஆண்கள்- 5,41,332, பெண்கள்- 5,49,939, மூன்றாம் பாலினத்தவா் 55, மொத்தம் 10,91,326 போ். இதில் 1,17,364 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில், நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,200 வாக்குச் சாவடிகள் இடம் பெற்றிருந்த நிலையில், சிறப்பு திருத்தத்துக்கு பின் 1,514 வாக்கு சாவடிகளாக உயா்த்தப்பட்டன. விடுபட்ட வாக்காளா்கள் வருகிற ஜனவரி 18-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா்களை சோ்க்க உரிய படிவத்தை நிறைவு செய்து வழங்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com