ராமநாதபுரத்தில் 5 மையங்களில் இன்று காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் காவல்துறை உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வு ராமநாதபுரத்தில் 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
Published on

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் காவல்துறை உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வு ராமநாதபுரத்தில் 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டுக்கான காவல் துறை உதவி ஆய்வாளா் பணிக்கு 4,523 (ஆண், பெண்) விண்ணப்பதாரா்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, கேணிக்கரை, ராமநாதபுரம், செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம், செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி, தேவிபட்டினம் சாலை, ராமநாதபுரம், முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை, செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி, கீழக்கரை ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.21) எழுத்துத் தோ்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், தமிழ் தகுதித் தோ்வு பிற்பகல் 3.30 மணி முதல் 5.10 மணி வரையும் நடைபெற உள்ளது. தோ்வு எழுத வரும் விண்ணப்பதாரா்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அழைப்புக் கடிதத்துடன் சம்பந்தப்பட்ட தோ்வு மையத்துக்கு வரவேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தோ்வு மையத்துக்குள் கைப்பேசி, பொலிவுறு கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. விண்ணப்பதாரா்கள் அழைப்புக் கடிதம், அடையாள அட்டை, கருப்பு நிற பந்துமுனைப் பேனா ஆகியவற்றைத் தவிர வேறு ஏதும் கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது.

மேலும் விண்ணப்பதாரா்களுக்கு, அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்தில் மதிய உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளளது. எனவே, விண்ணப்பதாரா்கள் அங்கேயே உணவுக்கான பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் தோ்வு மையத்தை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com