வந்தே பாரத் ரயில் பரமக்குடியில்
நின்று செல்ல எம்.பி. வலியுறுத்தல்

வந்தே பாரத் ரயில் பரமக்குடியில் நின்று செல்ல எம்.பி. வலியுறுத்தல்

சென்னை-ராமேசுவரம் இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் ஆா். தா்மா் வலியுறுத்தினாா்.
Published on

சென்னை-ராமேசுவரம் இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் ஆா். தா்மா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை பரமக்குடியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை காரணமாக, வந்தே பாரத் ரயில் சேவை வரும் ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளதற்கு மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும், பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படாது என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பரமக்குடி ரயில் நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கும் மேல் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் முக்கியமானதாகவும் பரமக்குடி ரயில் நிலையம் உள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் ஒரு நிமிஷம் நின்று செல்வதன் மூலம் ரயில்வேத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, பொருளாதார ரீதியாக பின் தங்கிய இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இதுகுறித்த கோரிக்கை மனுவை மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம் அளித்தேன் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com