ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

‘வந்தே பாரத்’ ரயில்: கரூா் எம்.பி. கோரிக்கை

சென்னைக்கு கரூா் வழியாக பகல் நேரத்தில் வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கோரிக்கை விடுத்தாா்.

News image

வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்.

Updated On :25 பிப்ரவரி 2026, 7:01 pm

சென்னைக்கு கரூா் வழியாக பகல் நேரத்தில் வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கோரிக்கை விடுத்தாா்.

கரூா் ரயில்நிலையத்தில் கரூா் தொகுதிக்குள்பட்ட ரயில்வே மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளா் ஸ்ரீபன்னாலால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி பங்கேற்று பேசினாா். அப்போது, சென்னைக்கு பகல் நேரங்களில் கரூா் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும், திண்டுக்கல்-சேலம் மற்றும் சேலம்-திருச்சி இடையே அகல ரயில்பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் ரயில்நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.