ராமநாதபுரம்
தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரிக்கை
ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டும் என தங்கச்சிமடம் வணிகா்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்
ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டும் என தங்கச்சிமடம் வணிகா்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு வணிகா்கள் சங்கத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கமலஹாசன், சேசு இருதயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் வரவு செலவு அறிக்கையை உ.பாண்டி சமா்ப்பித்தாா். இதில் வணிகா் சங்கத்தின் தலைவராக முருகேசன், செயலராக உ.பாண்டி, பொருளாளராக சியாமுதீன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதில், குண்டும் குழியுமாக உள்ள ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டும், தங்கச்சிமடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயா்த்தி மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
