ராமநாதபுரம்
தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியில் எரிவாயு உருளை கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியில் எரிவாயு உருளை கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பாலைக்குடி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் செல்வஹாசி மனைவி ஹதீம்தாய் (60). இவரது கணவா் உயிரிழந்த நிலையில், இதே பகுதியில் வசித்த மகள் ஜமிமா பேகம் (29) வீட்டில், இவா் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி, இவா் தேநீா் போடுவதற்காக அடுப்பைப் பற்ற வைத்தாா். அப்போது எரிவாயு உருளைக் கசிவால் ஹதீம்தாய் மீது தீப் பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு புதன்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.